வாகன ஓட்டுநர் உரிமமும் தமிழும்

நேத்து காலைல டிரைவிங் லைசென்ஸ் எடுக்கறதுக்காக திருவான்மியூர் RTO office வரைக்கும் போயிருந்தேன். பத்து மணிக்கு டாண்ணு வந்துடனும்னு இன்ஸ்டிரக்டர் சொன்னதால ஒம்போதரைக்கு எல்லாம் அங்க ஆஜர். திருவான்மியூர் RTO test பீச் பக்கத்துல இருக்க ரோட்ல தான். பொட்ட வெயில்ல காத்துகிட்டு இருந்தது தான் மிச்சம். test ஆரம்பிக்க பன்னிரெண்டு மணி ஆயிடுச்சு. அது வரைக்கும் பொழுது போகணுமே, கூட வந்தவங்கள வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன்.

எங்க செட்ல எட்டு பொண்ணுங்க, ஆறு பசங்க. பொண்ணுங்க சுப்ரியாவில ஆரம்பிச்சு திலகவதி வரைக்கும் பல ஊரு மக்கள். ஆனா எல்லாருக்கும் பொதுவான ஒரே விஷயம் – ஒரு வார்த்தை கூட தமிழ் பேசக்கூடாதுன்னு கவனமா இருந்தாங்க. பசங்கள்ள ரெண்டு பேரு Groningen, F1 னு ஒரே பீட்டர். மத்த மூணு பேரு என்னை மாதிரி மண்ணின் மைந்தர்கள்.

கொளுத்துற வெயில்ல கொஞ்சம் மூளை சூடாகிடுச்சு. என்னடா இது தமிழ்நாட்டோட தலை நகரம்னு பேரு, தமிழ் பேச கூச்சப் பட வேண்டியிருக்கேனு யோசனை. முக்கியமா ஸ்பென்சர் பிளாசா மாதிரி இடங்கள்ள தமிழ் எங்கனு தேட வேண்டியிருக்கு. இளைய சமுதாயம் தமிழை மறந்துடுமோனு ஒரு பயம் (அதான் எனக்கு வயசாயிடுச்சுன்னு முன்னமே சொல்லிட்டேன்ல).

இப்படி சிந்தனை ஓடிக்கிட்டிருக்கப்ப இன்னொரு பக்கத்துல இருந்து இடி. “நீ மட்டும் ரொம்ப சுத்தமோ, இங்கிலீஷ்ல தானே ப்ளாக் எழுதுற”. அப்ப வந்தது தான் இந்த ஞானோதயம், மெட் ப்ளாக்ல தமிழ் எழுதுவோம்னு.

ஆன்கில வார்த்தைய அப்படியே தமிழ் ல எழுதுனா அதுக்குப் பேரு transliteration. நான் மேல எழுதியிருக்கப் பதிவுல இருக்க ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை

RTO – வட்டாரப் போக்குவரத்து அலுவலர்
Driving Licence – ஓட்டுநர் உரிமம்
Instructor – ஆசிரியர்
ஆஜர் – ?
Beach – கடற்கரை
Test – தேர்வு
ஸெட் – குழு
English – ஆங்கிலம் :-)
Blog – வலைப் பதிவு
Metblog – நகர வலைப் பதிவு (?)

இனிமே அப்பப்ப தமிழ் இங்க தென்படும்.

12 Comments so far

  1. WA (unregistered) on August 8th, 2006 @ 7:03 pm

    Idhellaam too much, indha words ellam theriyaama naanga enna koranju poittom?

    Anyway, indha postukku reason jealousy i say. Enga alavukku Tanglish thereelenra jealousy has made your write this post.


  2. F e r r a r i (unregistered) on August 8th, 2006 @ 7:03 pm

    எல்லாம் சரி. முக்கியமான பேப்பர் கொடுத்தீங்களா ஓட்டுனர் உரிமம் வாங்க? இல்லை 11 போட்டு வாங்கினீங்களா?


  3. Chenthil (unregistered) on August 8th, 2006 @ 7:07 pm

    பிரபு, நாங்க கை சுத்தம். மத்தது எல்லாம் Driving School பாத்துகிட்டாங்க.


  4. Lavanya (unregistered) on August 8th, 2006 @ 7:17 pm

    Oru vazhiya padichu mudichen indha postaa. Phew. Great job Chenthil – I am delighted that my Tamil improvement features so high on your list.


  5. Keerthivasan (unregistered) on August 8th, 2006 @ 7:22 pm

    Weblognaaththaan Valaippadhivu !

    Blognna Laippadhivu ! avvlodhaan


  6. MARUTHU PANDIAN (unregistered) on August 8th, 2006 @ 7:25 pm

    ‘thamizh kaatha’ kumaran/chenthil.

    interesting inspiration.


  7. Jacky (unregistered) on August 8th, 2006 @ 7:29 pm

    Petrol, diesel ellam eppadi tamizh la sollarathu? And puncture kadai suthamana tamizh la eppadi sollarathu? Katru nirapum edam na? Tyre na chakkaram, tube na?
    Ella en vandi masathu oru thadavai puncture avum athan kekaran. Don’t mistake me.


  8. R.S.Money (unregistered) on August 8th, 2006 @ 7:43 pm

    Very interesting and it reminds me of Pachcha @ Parthasarathi of Triplicane and G.Mani and Kamal of the Picture INDIAN.


  9. Chenthil (unregistered) on August 8th, 2006 @ 8:03 pm

    லாவண்யா, மருது, கீர்த்தி நன்றி.

    ஜாக்கி – fuel =எரிபொருள். இது எனக்குத் தெரிந்தது. நீங்க கேக்குறது எடக்கு மொடக்கா தான் இருக்குது. மற்ற வார்த்தைகள் தேடிட்டு சொல்றேன். 1930 ல அபேட்சகர்னு இருந்தது, 1960ல வேட்பாளர்னு தமிழ்ப் படுத்தப் பட்டது. அது இப்போ 2000த்துல கேண்டிடேட்னு மாறாம இருக்கணும்கிறது தான் என் வேண்டுகோள்.


  10. Chenthil (unregistered) on August 8th, 2006 @ 8:53 pm

    WA – ஆங்கிலம் பேசினாக் கூட பரவாயில்ல,இந்த தங்கிலீஷ் பேசுறது அநியாயம்.

    R.S. Money – அதே தான்


  11. Ambrose (unregistered) on August 9th, 2006 @ 4:39 am

    Kadaisila….Avanga ena sola vanthanganae yarukum puriyalangrathu theriuthu…..


  12. observer (unregistered) on August 9th, 2006 @ 6:16 am

    I know the post was in jest, but on a more serious note, the reason why people avoid speaking in Tamil is, I think, an unconscious reaction to the policies of parties (like PMK) that want to impose Tamil everywhere (15% tax for non-Tamil titles in Tamil films, Tamil chants in temples, etc.). People who don’t speak Tamil should want to learn Tamil (by making attractive movies, writing good books, etc), not forced to do it.



Terms of use | Privacy Policy | Content: Creative Commons | Site and Design © 2009 | Metroblogging ® and Metblogs ® are registered trademarks of Bode Media, Inc.