Celebrating Chennai – மாது சீனு
மாது: டேய் சீனு. உனக்கு தெரியுமா? இன்னிக்கு மெட்ராஸ் டே
சீனு: அப்படியா? இந்த “Friendship Day” “Valentines Day” மாதிரியா? எல்லாரையும் பார்த்து ‘Happy Madras Day’அப்படின்னு சொல்லனுமா?
மாது: அட சீ. This is not a formal day. பாவம் டா மெட்ராஸ். ஒரு நாளாவது city பத்தி மக்கள் நெனச்சா நன்னா இருக்கும். இன்னும் கொஞ்சம் விளம்பரம் பண்ணனும்
சீனு: அது சரி. உடனெ போத்தீஸ் குமரன் எல்லாத்துலயும் மெட்ராஸ் டே சிறப்பு தள்ளுபடி காஜா பீடி அப்படின்னு போட்டுடுவா. தி நகர் வழியா போறவா கதி அதோகதிதான்
மாது: அது மட்டுமா. மெட்ராஸ் டே சிறப்பு நிகழ்ச்சி அப்படின்னு டி.வில வரும். அசின் ஷ்ரியா எல்லாம் வந்து ‘என்க்கு மெட்ராஸ் ரொம்ப பிக்கும்’ அப்படின்னு தத்து பித்துனு உளருவா. சாலமன் பாப்பையா தலைமையில ‘மெட்ராஸ் நல்ல பெயரா சென்னை நல்ல பெயரா’ அப்படினு பட்டிமன்றம் நடக்கும். உலக தொலைகாட்சியில் முதன்முறையாக மெட்ராஸ் டே முன்னிட்டு ‘அர்த்த ராத்திரியில் அல்ப கன்னிகள்’ படம் போடுவான்
சீனு: டேய் அது மலையாள படம் டா
மாது: டப் பண்ணி போடுவா டா. எனக்கு மெட்ராஸ் டே அன்னிக்கு எதாவது Special ஆ பண்ணனும். கூவம்ல போட்ல போகனும்னு ஆசையா இருக்குடா சீனு. இந்த ஜென்மத்துல நடக்குமா?
சீனு: அது ஒண்ணு தான் குறைச்சல். நீயும் ஜானகியும் கூவம்ல ‘ஆஹா இன்ப நிலாவினிலே ஒஹோ ஜகமே ஆடிடுதே’ அப்படினு பேசிண்டே. சீ. பாடிண்டே போட்ல போங்கோ. என்ன, போட் கவிழ்ந்து தண்ணில விழுந்துட்டா, அப்புறம் அள்ளி எடுக்க ONYX ஆள் கூட வர மாட்டா
மாது: அப்போ ஸத்யம்ல படம் பார்க்கணும்டா
சீனு: ஏண்டாபா? ஏற்கனவே ஆபிஸ் முடிச்சிட்டு அந்த ரோட்ல வரவா நிலைமை பாவம். இந்த கூட்டத்துல நீ எப்படி உள்ளே போவ?
மாது: ஆமாம்டா. புதுசு புதுசா Theatre கொண்டு வராளே தவிர பார்க்கிங்க்கு ஒண்ணுமே பண்ண மாட்டேங்கறா. Entrance கொஞ்சம் பெருசா வச்சா தான் என்னவாம்?
சீனு: Schmidt Memorial போடா. One of the famous landmarks
மாது: வீட்டுலையே போகலாம் டா
சீனு: என்னடா சொல்றே?
மாது: Schmidt Memorial ஆ அது. பாவம். பேசாம அதுக்கு மூச்சா மெமோரியல்னு பேர் வச்சிடலாம். பப்ளிக் டாய்லெட் ஆயிடுத்தெ அது.
சீனு: ஹேய்! மவுன்ட் ரோட் Flyover க்கு ஜெமினி Flyover அப்படினு எப்படி பேர் வந்தது தெரியுமா?
மாது: இது கூட தெரியாதா? பார்சன் காம்ப்லெக்ஸ், பார்க் ஹோட்டல் இப்போ இருக்கற எடத்துல தான் ஜெமினி ஸ்டுடியோ இருந்தது. அது பக்கதுலயெ இந்த flyover வந்ததுனால, ஜெமினி flyover அப்படின்னு பேர் வந்தது.
சீனு: உனக்கு இவ்ளோ விஷயம் தெரியும? எனக்கு பைத்தியமே பிடிக்க போறது
மாது:பைத்தியம் சொன்ன உடனெ எனக்கு கீழ்பாக் மென்டல் ஹாஸ்பிடல் நியாபகத்துக்கு வரது. ஆனா கீழ்பாக் மென்டல் ஹாஸ்பிடல் அயனாவரத்துல இருக்கு. அது தெரியுமோ உனக்கு?
சீனு: அடிக்கடி போய் இருக்கியொ?
மாது: உதை வாங்குவே ராஸ்கல். சரி. பசிக்கறது. ஏதாவது சாப்பிடலமா?
சீனு: சரவண பவன் போலாமா?
மாது: சரவண பவனா? நிறைய பைசா வச்சு இருக்கியா?
சீனு: அட ஆமாம்ல. மாச கடைசி வேற. போற போக்குல திருப்பதி வெங்கடாசலபதி மாதிரி, சரவண பவன்ல எடைக்கு எடை தங்கம் கொடுத்து தான் full meals சாப்பிடனும் போல இருக்கு
மாது: தங்கம்னு கத்தி சொல்லாதடா. ஜானகி காதுல விழுந்துட போறது. மெட்ராஸ் டே GRTல ஏதாவது வாங்கி கொடுனு கேக்க போறா. அப்புறம் அவளுக்கு தங்கம் எனக்கு அந்த கொடுமையான கலர்ல ஒரு பர்ஸ் கொடுப்பான். அத வச்சிண்டு 12Bகாக பனகல் பார்க் வந்து நிக்க வேண்டி இருக்கும்
சீனு: பார்க் சொன்ன உடனெ நியாபகத்துக்கு வறது. மெட்ராஸ்ல முக்காவசி பார்க் renovate பண்ணிட்டா பார்தியோ? ரொம்ப நன்னா இருக்கு
மாது: ஆமாம்டா. பேசாம வள்ளுவர் கோட்டம் பக்கத்துல இருக்க பார்க் போகலாம். நன்னா இருக்கும்
சீனு: உன் வண்டி தான் ரிப்பேர் ஆயிடுத்தெ. ஆட்டோல போவியா?
மாது: ஆட்டோல போறதுக்கு சரவண பவன்ல வயிறு நிறைய சாப்டுடலாம்
சீனு: டேய் மாது. MAPA. Madras Auto Passengers Association ஒண்ணு இருக்கு தெரியுமா? பேசாம அதுல மெம்பர் ஆகிடேன்? இந்த frequent flier மாதிரி frequent autoer ஆகிடு. டிரைவர் எல்லாம் friend பிடிச்சிக்கோ. பாதி மீட்டர்ல சவாரி பண்ணலாம்
மாது: போடா லூஸ்.
சீனு: Best மாசிலாமணி ஸ்ட்ரீட் கையேந்தி பவன்தான். அங்க கெடைக்கற நெய்பொடி தோசை இருக்கே? பிரமாதம். விலையும் கம்மி. மெட்ராஸ் டே பத்தி பேச ஆரம்பிச்சோம். எங்க எங்கயோ போயிடித்து. பேசாம இந்த போஸ்ட்ல போட்டு இருக்க மாதிரி பண்ணி இருக்கலாம்
மாது: ஆமாம். அத விட நம்மளால முடிஞ்சது இந்த cityக்கு செய்யனும்டா. Atleast ரோட்ல குப்பை கொட்டறது நிறுத்தனும். இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா ஏதாவது பண்ணினா தான் உண்டு
சீனு: என்னடா ஆடியன்ஸ்க்கு மெஸ்ஸேஜ் ஆ?
மாது: ஹி ஹி
suber appu…
:)
Romba nanna irukku maama!!!
Prabhu
BeshBesh padika vedikayagavum irundhathu nalla message vera sollirukel.
Prabhu
Besh Besh romba nanna irundhathuba, padika padika kudave malarum ninaivugal vera.
anna..romba nalla irundhuchunga naa!..endra orukum kuda oru ‘day’ kondadinna nalla thanga anna irukum..yar kitta kekaradhungoo!!
Super…!!!!!