சென்னையும் செந்தமிழும்

ஊர்ப் பக்கத்துல இருந்து வந்தவங்களக் கண்டாலே இந்த மெட்ராஸ் பசங்களுக்கு ஒரு இளப்பம் தான். அதுவும் மதுரைக்கு அந்தப் பக்கம் இருந்து வந்தா போதும், ஒண்ணுமே தெரியாதவன மாதிரி தான் பேசுவாங்க. அதே மாதிரி தான் ஊர்ப் பசங்களும். ஏதாவது ஊர்க் கடைசியிலே இருக்க பொறியியல் கல்லூரில மாட்டீகிட்டீங்க, அவ்வளவு தான். மெட்ராஸ் பசங்கன்னாலே ராகிங்ல தனி கவனிப்பு.

இந்த மாதிரி ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் ஒரு சந்தேகத்தோட தான் பாப்பாங்க. கல்லூரியில படிக்கிறப்ப ராத்திரி முழுக்க உக்காந்து ஒரே வாக்குவாதம் தான், எங்க ஊரு பெரிசா உங்க ஊரு பெருசான்னு. தினப் பொழுதுக்கும் இப்படி வெட்டிக் கதை பேசிப் பொழுதக் கழிப்போம்.

இப்ப ஏம் இதப் பத்தி எழுதறேன்னு கேக்கிறீங்களா? இந்த வலைப் பதிவிலே கொஞ்ச நாளா ஒரு சில பேரு எதை எழுதினாலும் சென்னைல இருக்க தமிழர்கள் கலாச்சாரத்தைக் காத்துல பறக்க விடுறாங்க, தமிழர் அல்லாதவர் ஆதிக்கம் அதிகமாயிட்டே போகுதுன்னு பின்னூட்டப் பெட்டியில ஒரேயடியா அனல் பறக்க எழுதறாங்க. எல்லாத்தயும் எழுதுறவரு ஒரே ஆள் மாதிரி தான் தெரியுது – எல்லா பின்னூட்டத்தலயும் their க்கு பதிலா there ன்னு அடிக்கிறாரு. சரி யாரும் இதுக்கு பதில் எழுத வேணான்னு பாத்தா, அவரே வட நாட்டுப் பேர்ல ஒரு பின்னூட்டம் எழுதி அதுக்குப் பதில் எழுதறாரு. அதுல ஒரு பெரிய நகைச்சுவை – சென்னைல இருக்க தமிழர்கள் எல்லாம் ஜைண மதத்துக்கு மாறி வீட்டில தமிழுக்குப் பதிலா மார்வாடி மொழி பேசுறாங்களாம். வடிவேலு மாதிரி சொன்னா – “ஆரம்பிச்சிட்டாங்கய்யா, ஆரம்பிச்சிட்டாங்க”.

இப்படி எழுதறவருக்கு நான் சொல்றதெல்லாம் ஒண்ணு தான். இதெல்லாம் சின்னப் பசங்க விளையாட்டு. நாங்க கல்லூரியிலயே இந்த வெட்டி வேலையெல்லாம் முடிச்சிட்டோம். நீங்களும் கொஞ்சம் பக்குவப் பட்டு இதெல்லாம் விட்டுட்டு வேற வேலயப் பாருங்க.

11 Comments so far

 1. ஆனந்த் (unregistered) on September 30th, 2006 @ 9:56 pm

  என்ன, இதுக்கு ஒரு பதிலக் கூட காணோம்? அய்யாவுக்கு தமிழ்’ல எழுதப்படிக்க தெரியாதோ என்னமோ!


 2. okonami yaki (unregistered) on October 1st, 2006 @ 11:30 am

  Hola amigo,
  Puedo leer esto, y mas o menos comprender tambien; pero con mi MacIntosh OS no puedo respuestar a ti en Tamil. Comprendes ?
  Okonami…


 3. Anand (unregistered) on October 1st, 2006 @ 2:11 pm

  ¡Sí, entiendo!


 4. nandhu (unregistered) on October 2nd, 2006 @ 4:50 am

  hey,

  what did the mexican dude say, in English pls.


 5. Chenthil (unregistered) on October 2nd, 2006 @ 2:49 pm

  Nandhu, this is what Okonami has to say
  “Hello friend, I can read this, and more or less include/understand also; but with my Macintosh OS I cannot respuestar to you in Tamil. You include/understand? Okonami… ”

  And Anand replies

  “Yes, I understand”

  Okonami, I just want those Tamil fanatic pretenders to reply to this post, but as Anand says, they probably cannot read Tamil.


 6. sj (unregistered) on October 4th, 2006 @ 10:56 am

  Hi Chenthil you wanted me to talk about the Tamil language in this blog instead of the other. Firstly do you think the Tamil language can survive in Chennai? From what I hear in the press and from normal people it seems the language is struggling to maintain its position amongst Tamilians of Chennai. I am not trying to target anyone but mainly in Chennai many Tamilian youth don’t like talking in Tamil can you explain the reasons for this?


 7. Chenthil (unregistered) on October 4th, 2006 @ 3:57 pm

  SJ – Tamil can and does survive in Chennai. I don’t hear in press or from normal people, I am one of those normal people. For Tamil to survive and grow, it needs to be spoken. When two Tamils speak to each other, they should make it a point to talk in Tamil. Here I have written this post in Tamil, what prevents you from replying in Tamil.

  Why many tamilian youth don’t like talking in Tamil? This question has many answers. But the talk of throwing out non Tamils or forcing non Tamils to talk in Tamil is not a solution. As I said, first let us start talking in Tamil. When was the last time you said Nandri instead of Thanks? Think about it, and let us start talking in Tamil first before asking others to.


 8. Nastikan (unregistered) on October 5th, 2006 @ 4:50 am

  Out of curiosity, Normal Chenthil, why are your Tamil posts in transliteration of (your?) speech rather than in standard written Tamil?

  (What prevents me from replying in Tamil is that I don’t know how to type in Tamil, but I agree with your point.)


 9. sj (unregistered) on October 5th, 2006 @ 9:14 am

  Thanks for your feedback Chenthil I can’t type in Tamil. I have been away from Chennai for some time so maybe I am getting the wrong news. With the issue of forcing Tamil on non Tamilians I am not saying this should occur. But don’t you think it is practical for non Tamilians to learn if they plan to live here. I lived in Delhi and without Hindi I found live difficult English was not an option. So why not the same in Chennai?


 10. Nilu (unregistered) on October 5th, 2006 @ 10:48 am

  SJ,

  Did Krish teach English? You are a good student.


 11. sj (unregistered) on October 10th, 2006 @ 6:18 am

  What do you think about Madras Bashai Chentil?Terms of use | Privacy Policy | Content: Creative Commons | Site and Design © 2009 | Metroblogging ® and Metblogs ® are registered trademarks of Bode Media, Inc.