கானா
உனுக்கும் எனுக்கும் உறவிருக்கு அஞ்சல! – அந்த
உறவ நானு ஒளிச்சு வெச்சேன் நெஞ்சுல!
மினுக்கிவந்த பொன்னழகே அஞ்சல! – இந்த
மீர்சாப்பேட்ட மாமன் கண்ணு துஞ்சல!
(உனுக்கும் )
மேம்பாலம் மவுண்ட்ரோடு
. மெரினால கூவிக்கவா!
மாம்பலம் ஐஸோஸு1
. மண்ணடின்னு தாவிக்கவா!
ஆம்மான்னு ஒரு வார்த்த அஞ்சல! – அய்ய
அசத்தி வுட்டா அடிம நானு நெஞ்சுல!
(உனுக்கும்)
இந்த கானாவை மேலும் படிக்க இங்கே போய்ப் பாருங்கள். ஆசாத் கானா பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
கானா என்பது சென்னை அடித்தட்டு மக்களின் கானம். நான் சென்னைக்கு வந்ததே எனது பதிமூன்றாவது வயதில் தான். மீண்டும் கல்லூரி, வேலை எனத் தென் தமிழ்நாட்டிலேயே இருந்ததனால் கானா பற்றி அதிகம் தெரியாது. தேவாவின் இசையில் கேட்டது தான் இது வரை கானா.
தேவாவின் கானா பாட்ட விட அந்த காலத்து பாட்டு ஒண்ணு நல்லா இருக்கும்
வா வாத்யாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன் ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாபேட்டை கொக்கு.
இன்னொரு பாட்டு கருந்தேள் கண்ணாயிரம் படத்துல வரும்.
பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே
நான் நெருங்கி போனேன்யா பொண்ணு நல்லாலே
அவ பேன்ட் தந்தா சர்ட் தந்தா போட பிடிக்கல
:)
ஜாம்பஜார், பூந்தமல்லி, சைதாப்பேட்டை… கானா-ல லொக்கேஷன் ரொம்ப முக்கியம் போலிருக்கு! என்னோட ஃபேவரைட் “பேட்டை ராப்” – pucca Metroblogging material! Unfortunately it’s not a gana song
Kamal Haasan is quite interested in gaana.
In a TV show Kalakka Povathu Kamal, he recited quite a long gaana composed by himself. It had authentic lyrics, and some cusswords too :).
I did stumble on an online source for that show, but am not able to track back where it was.