தாழ் தள சொகுசுப் பேருந்து !

அவசரமாக இல்லம் திரும்பவேண்டும் என்ற கட்டாயத்தில் பழைய மகாபல்லிபுரம் சாலையோரம் வந்து நின்றேன். கம்பெனி பஸ்ஸில் மட்டும் சென்று தான் பழக்கம். நேற்று சூழ்நிலை காரணமாக பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டைப் பயன்படுத்தினேன். ஆட்டோக்ராப் சேரன் போல மூன்று வருடங்களுக்கு முந்தய ஞாபகங்கள் கண்முன் விரிந்தன.

கூட்டத்தில் சிக்கி நசநச என்று வியர்வையில் நனைந்து, அசட்டுத்தனமான ப்ரேக்குக்கெல்லம் முன்னல் நிற்பவரின் வழுக்கையில் முட்டி, அரைமணி நேரம் நின்றபின் திடீர் என கிடைக்த ஸீட்டில் ஓடிப்போய் அமர்ந்தவுடன் “லாஸ்ட் ஸ்டாப்.. எல்லாம் எறங்கு…” என்றார் கண்டக்டர். தொரைப்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டை வந்தடைந்தேன்.

27-04-07_1728வில்லிவாக்கம் செல்லவேண்டும். அயனாவாரம் செல்லும் 23C, பஸ் ஸ்டாப்பில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. எனக்கு வடிவேலு “காதல் தேசம்” படத்தில் செய்வது போல ஓடிப்போய் பஸ்ஸில் ஏறுவது கைவந்த (கால்வந்த) கலை. அந்த வித்தை இன்னும் என்னிடம் இருக்கிறதா என்றறிய, பஸ்ஸ்டாப்பில் இருந்து கிளம்பிய 23Cஐ துரத்தினேன்.

பல்ப் !

அட. கதவெல்லாம் வைத்து மூடியிருக்கிறார்கள். தட தட வென தட்டினேன். மடார் என்று திறந்தது. இது என்ன சிஸ்டம் ? உள்ளே ஏறினேன். கண்டக்டர் முறைத்துக் கொண்டிருந்தார். முன்னே டிரைவரிடமிருந்து “பேமானி !” என்ற குரல் மட்டும் வந்தது. மறுபடி கதவு தானாக மூடிக் கொண்டது. அப்போது தான் உணர்ந்தேன்.

சென்னையில் புதிதாக (ஒரு மாதம் முன்னர், என நினைக்கிறேன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தாழ்தள சொகுசுப் பேருந்தில் தான் ஏறி இருக்கிறேன். அட ! சென்னை மாநகரத்து பஸ்ஸா இது என சொல்லும் அளவுக்கு இருந்தது. இருக்கைகளெல்லாம் பாந்தமாக “சொகுசு” என்ற பெயருக்கு ஏற்ப அட்டகாசமாக அமைத்திருக்கிறார்கள்.

“டிக்கெட் எடுக்கமாட்டியா ?” என்று மிரட்டினார் கண்டக்டர்..”ஐனாவாரம். ஒன்னு”. போன பஸ்ஸில் டிக்கெட்டே எடுக்கவில்லை என்பது இப்போது தான் ஞாபகம் வந்தது. பத்து ரூபாய் டிக்கெட் கிழித்துக் கொடுத்தார். பத்து ரூபாயா ?!!! எக்ஸ்ப்ரஸ் பஸ் என்பதால் போலும்.

அடுத்த ஸ்டாப்பில் வண்டி நின்றது. பலர் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் ஏறினார். பாக்கி அனைவரும் பின்னோக்கி விரைந்தனர். பின்னால் வந்த சாதாரன 23Cஐ நோக்கி ஒடினர். பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தவுடன், “பத்து ரூவாயா ? நிறுத்துங்கய்யா.. நான் எறங்கனும். அனியாயமா இருக்கே !” என்று ஏறியவரும் இறங்கி விட்டார். பீக் ஹவர்சிலும் நான் வந்த பஸ்ஸில் கூட்டம் இல்லாததின் இரகசியம் இப்போது தான் புரிந்தது.

பின்னால் வந்துகொண்டிருந்த LSS 23C பிதுங்கி வழிய வந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் என்பது பெரிய சமாச்சாரம், இல்லையா. இரயில் பெட்டியில் உள்ளது போலே, பேருந்தில் முதல் வகுப்பு இந்த தாழ் தள சொகுசு பேருந்து என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். “சில சமயங்களில் இதுவும் பிதுங்கி வழியும் சார்” என்றார் முன்சீட்டுக்காரர்.. “ஆனா ! Foot-board அடிக்க முடியாது. கதவு சாத்திக்கும். லிமிட்டடாதான் கூட்டம் இருக்கும்..” என்றார்.

வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனந்தம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா அதிர்ச்சியானார். “என்னடா இவ்வ்ளோ சீக்கிரம்.. எதுல வந்தே”.

“தாழ்தள சொகுசுப் பேருந்து” என்றேன்.
“ஹ ஹ ! வாயிலையே நுழையிலையே ” என்றார் அப்பா.

அது சரி. சிலரால் அதன் வாயிலில் கூட நுழைய முடிவதில்லை.

5 Comments so far

 1. "டிக்கெட் எடுக்கமாட்டியா" (unregistered) on April 29th, 2007 @ 11:45 am

  can’t you write what you have to say in english? illa na at least tamil-a inglish ila type pannalam ila? not everyone who stays in cheNAI can read tamil.


 2. Ramki (unregistered) on April 29th, 2007 @ 3:15 pm

  Two Questions on these “Low Floor Hi Fi Buses”…

  1. Why are their intereiors painted in Yellow? Has this yellow paint to do with Politics?

  2. And, these buses charge atleast twice normal buses.. Then why are they not Air conditioned? When are we going to see AC City buses in Chennai?


 3. shek (unregistered) on April 29th, 2007 @ 7:42 pm

  Ramki,
  Not the whole interiors of these buses are painted yellow–only those hand rails.Comfort is paramount,not colour.About AC buses,you’ll have to wait for probably another five to ten years.If you are desperate to travel in an AC bus,use those Orange Line and White Line buses.They will now come equipped with an overhead ventilator.Else get a car.


 4. shek (unregistered) on April 29th, 2007 @ 7:46 pm

  Keerthivasan,
  What’s the reason behind writing the post in tamil?Those “suzhis” are all misplaced.

  If thaazhthala sogusu perunthu is tongue-twisting,try this–SEMI LOW FLOOR DELUXE BUS.

  It’s sad that the 23C and 47A deluxe buses run from tiruvanmiyur and not from besant nagar.BTW check out 21G deluxe—always crowded.Noone bothers about the doubled fares.


 5. Ramki (unregistered) on April 30th, 2007 @ 12:21 am

  I am quite sure that given Chennai’s Hot and Humid Climate, AC City Buses will be a big hit… afterall, we have such buses in other Major Asian Cities (HK, Singapore, Dubai) right? Why not in Chennai, atleast in some long routes ?

  BTW Dubai has taken this concept (of airconditioning) to a new destination – they are installing Air Conditioned Bus Stops across the city… now Shek, is it not time that Chennai considered some Air Conditioned Bus Routes in say a 21G or a D70 ?Terms of use | Privacy Policy | Content: Creative Commons | Site and Design © 2009 | Metroblogging ® and Metblogs ® are registered trademarks of Bode Media, Inc.