பாடிகாட் பிள்ளையார் துணை
Play your own tune.. no rules. no raagas..
Ladies and gentle men, this is Chennai Gaana…
Just one guideline, you need to imitate Thenisai Thendral Deva’s voice to get nativity.
ஏ ! ஆட்டோ ஆள்வார்பேட்டை போகலாமா !!!!
ரைட்டு மாமா ! ரைட்டு மாமா !!
யே, மீட்டர் போடாமலே போகலாமா !!
தப்பு மாமா ! தப்பு மாமா !!
யே.. ஆவடி தாண்டினா அம்பத்தூரு..
அம்பத்தூரு தாண்டுனா கொரட்டூரு..
அங்கே இங்கே ஆளப்புடிச்சு க்ரவுண்டப் பாருடா..
இதுக்கு அப்பாலே க்ரவுண்டெல்லாம் கோடி ரூபாடா !
(ஏ ! ஆட்டோ…)
Continue reading.. (ahem.. singing..)
யே கொரட்டூரு தாண்டுனா வில்லிவாக்கம்..
அட வில்லிவாக்கம் தாண்டுனா ஐனாவாரம்..
நடுவுல இருக்குதடா ஐ சி யெப்புதான்..
யே அங்கதாண்டா செய்வாங்க ரயிலு பொட்டிதான்..
(ஏ ! ஆட்டோ…)
அடேய்.. ஐனாவாரம் தாண்டுனா புரசவாக்கம்..
யம்மா, புரசவாக்கம் தாண்டுனா யெக்மோரு..
யெக்மோரு பக்கத்துல செண்ட்ரலுடா
அட சென்ட்ரலுக்கு யெய்த்தால நம்ம பூங்கா நகருடா.
(ஏ ! ஆட்டோ…)
ஏ.. ஸ்ட்ரெய்ட்டாதான் உட்டுகினா மவுண்ட் ரோடு..
லெப்டாவே வுட்டுகினா மெரினா பீச்சு..
அட.. மவுண்ட் ரோடில் இருக்கு நிறைய தேட்டருங்க..
அங்கே நம்ம தலைவரோட படத்தத்தாண்டா காட்டுராங்க..
(ஏ ! ஆட்டோ…)
ஆமா.. மவுண்ட் ரோடு மேல போகும் ப்ளை ஓவரு..
அடியால பூந்து போனா நுங்கம்பாக்கம்..
பக்கத்தில் இருக்குதடா வள்ளுவர் கோட்டம்
அங்கேருந்து நேரா போனா கோடம்பாக்கம்..
(ஏ ! ஆட்டோ…)
கோடம்பாக்கம் பக்கத்துல வடபழனி..
அடேய் வடபழனி ரைட் எடுத்தா அசோக் நகருடா..
அங்கே புரியாம உள்ள போனா வெஸ்ட் மாம்பலம்டா
அட.. தெரியாம லெப்ட் எடுத்தா டி. நகருடா
(ஏ ! ஆட்டோ…)
டி. நகர் பக்கத்துல சைதாப்பேட்டை
சைதாப்பேட்டை பக்கத்துல கிண்டி அடையார்
அங்கேயெல்லாம் நமக்கொண்ணும் வேலையில்ல
நாம ஆழ்வார்பேட்டை ரூட்டெடுப்போம் சாலையில..
(ஏ ! ஆட்டோ…)
ஏ ! மறுபடியும் வந்தோமே மவுண்ட் ரோடு..
மாமா நிக்கிறாரு காக்கி சட்டைய போடு.
இதோதானே வந்துகினோம் ஆழ்வார்பேட்டை..
துட்ட எடுடா, இன்னிக்குதான் செம வேட்டை..
(ஏ ! ஆட்டோ…)
அண்ணே.. வெய்ட்டிங்கிலே போடுங்கண்ணே ஆட்டோவ
ன்னு காட்டுனேனே கமலஹாசன் போட்டோவ..
உள்ள போய் பாத்துட்டுவரேன் ஆண்டவர..
அவரு ஓகே சொன்னா அட்வான்ஸ் வாங்கி காசு தரேன்.
(ஏ ! ஆட்டோ…)
I’d love to gaanafy it, but the rearrangement of the letters (or prefixes, I should say) puts me off. Why can’t someone come up with a font that displays the letters in the way it is written?
This Stinks. Why dont you post meaningful and entertaining posts like Thennavan? He is the only metro blogger I like.
Navneeth, install Tamil key for firefox. That should show you the right way.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
SN, ill try to ( i like thennavan too). But this sure does stink.. !! :D
Navneeth, install Tamil key for firefox. That should show you the right way.
I’ve used TamilFox before (in XP), and whenever I type (I think that’s F12 font) it used to come out this way.
Good round-up of Chennai, using a Chennai-based folk art form. Pity the guys who dunno Tamil though…
so guys, why dont you use the ‘link language’ and provide us a translation from the ‘classical langauge’? lol…